எனக்கு தெரிந்த மொழிகளின் வார்த்தைகளையெல்லாம் நீ கவர்ந்து கொண்டதன் மூலம் என்னுடைய அறிவை நீ திருடிக் கொண்டதாய் நினைக்கிறாய்.இனி உன்னைப் பற்றி நீ எழுதச் சொல்வதன் மூலம் என்னை அறிவற்றவனாய் நிரூபிக்க விரும்புகிறாய்.மனிதனின் அறிவு புலன்களால் அமைந்திருப்பதால்...உன் தோலின் நிறத்தை,உன் வியர்வை வாசத்தை,எச்சிலின் சுவையை,ஸ்பரிசத்தின் வருடலை,தொடைகளின் வெப்பத்தை,புணர்வின் ஆழத்தை நான் மறக்கும் வரையில் என்னை உன்னால் அறிவற்றவனாய் நிரூபிக்கவே முடியப்போவதில்லை
Sunday, October 7, 2012
Sunday, May 20, 2012
இருப்பு....
எப்பொழுதும் பண்டிகை விடுமுறைகளில் சொந்த ஊருக்கு வருவது என்னுடைய வழக்கம்
தான்.இரைச்சலான நகரத்தின் பரபரப்பான வாழ்க்கையில் இருந்து இந்த பயணம் என்னை
ஆசுவாசப்படுத்திக் கொள்ள உதவும்.நான் வளர்ந்த தெருக்களில் நடப்பது,படித்த
பையன்களுடன் கூடி அவர்களுடைய உத்யோக வாழ்க்கை விசாரனைகளுடன் பால்ய நினைவுகளை அசை
போட்டபடி அமைதியான இந்த ஊரின் காற்றை சுவாசிப்பதில் வார்த்தைகளால் விளக்க முடியாத
மகிழ்ச்சி ஏற்படும்.அதுவும் பண்டிகை காலங்களில் முன் பதிவு செய்திடாமல் இந்த
ஊருக்கு வரும் கஷ்டம் இருக்கிறதே.சேர்ந்தார் போல் இரண்டு நாட்களுக்கு மேல்
விடுமுறையாக இருந்து விட்டால் போதும்.பேருந்தில் இடம் கிடைப்பதற்கு கர்ணம் போட
வேண்டியிருக்கும்.இப்படி இந்த ஊருக்கு வருவதென்பது மிக சுவாரசியமான விஷயம்.
ஆனால்
இன்று காலை ஊருக்கு வந்ததிலிருந்தே எதனாலோ என் மனம் தவித்துக் கொண்டிருக்கிறது.ஏதோவொரு
துர் நிகழ்ச்சியின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தது போல் அச்சமும்,குழப்பமும்
கலந்த நிலையில் புத்தி மெய்யுலகை விட்டு விலகி,ஒரு இயந்திரம் போல சுய நினைவற்று கற்பனையான
உலகில் தன்னிச்சையாக இயங்கி கொண்டிருக்கிறேன்.
எங்கள் வீட்டில் ஒரு நிலைக்கண்ணாடி உள்ளது.அது ஒரு ஆளுயர கண்ணாடி.அதன்
முன்னால் சென்று நின்றவுடன் அதில் தெரியும் பிம்பமே மொத்த உலகமுமாகி விடும்.அந்த
பிம்பதையே கண் கொட்டாமல் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருக்கும் போது பார்வையாளனும்
பார்க்கப்படும் பொருளும் ஒன்றாக கலந்து,சர்வமும் ஒன்றாகி,எல்லைக் கோடுகள் கரைந்து கால
வெளியில் சிந்தனையும் உடலும் மிதக்க ஆரம்பிக்கும்.எல்லா செயல்பாடுகளும் சூன்யமாகி மனம்
அமைதியாகி விடும்.இந்த சுவாரஸ்யமான அனுபவத்தை தியானத்தின் மூலமாக அடையலாம் என்ற
போதிலும் எனக்கு ஒரு ஆளுயர கண்ணாடியின் முன் நின்று என்னைப் பார்ப்பதே ஒரு வகை
தியானம் என்று தோன்றுகிறது.இன்று எனது மனம் இருக்கும் நிலையில் இந்த தியானம்
அவசியமாகப் பட்டதால் அந்த ஆளுயர கண்ணடியின் முன் நிற்கிறேன்.
எனது கண்கள் மிகவும் அழகாக இருக்கின்றன.ஆனால் கன்னத்தில்தான் சற்று சதை கூடுதலாக,மூக்கு
சற்று தட்டையாக இருக்கிறது.முன் தலையில் முடியின் அடர்த்தி குறைவாக இருக்கிறது.உடலிலும்
கை கால்கள் அவ்வளவு வசீகரமாக இல்லை.எனது கால்களுக்கு கீழிருக்கும் தரையின்
சில்லிப்பை உணர்கிறேன்.அந்த தரைக்கு கீழிருக்கும் பூமியின் நில அடுக்குகளில்
இப்போது என்ன நடந்து கொண்டிருக்கும் என தோன்றுகிறது.புத்தி மெதுவாக என் அடல்
அமைப்பைத் தாண்டி என்னைத் தாங்கிக் கொண்டிருக்கும் இந்த நில அமைப்பை விசாரனை செய்ய
ஆரம்பிக்கிறது.அடுக்கின் கீழ் அடுக்காக சென்று கொண்டேயிருக்கும் இந்த பூமியின் அச்சு
இப்போது நான் நின்று கொண்டிருக்கும் தரையிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறதோ?இந்த
அச்சோ அல்லது இந்த அடுக்குகளில் ஏதேனும் ஒன்றோ தன்னுடைய வழக்கமான செயல்பாடுகளிலிருந்து
விலகினால் நான் இப்போது நிற்கும் இந்த தரையின் ஸ்திரத்தனமையும் இந்த தரையும்
இல்லாமல் போகும்.அந்த செயல் மீறலின் பாதிப்புகள் அவ்வளவு தூரம் பயணம் செய்து இந்த
தரையை எப்போது வேண்டுமானாலும் வந்தடையலாம்.என்னுடைய மகனோ,பேரனோ இதே தரையில்
நிற்கும் போதெனில்,என்னுடைய வம்சத்தை அழிப்பதற்கான வேலை இப்போது இந்த தரைக்கு கீழே
நடந்து கொண்டிருக்கலாம்.
அப்போது மின்னல் போல ஒரு சிந்தனை வெட்டுகிறது.இவ்வாறு விமர்சனம் செய்து
கொண்டிருக்கும் சிந்தனை எங்கிருந்து கிளம்புகிறது.அதன் வடிவம் எவ்வாறிருக்கும்?என்
சிந்தனை மெதுவாக புற உலகை விட்டு அக உலகிற்குள் செல்ல ஆரம்பிக்கிறது.என்னுடைய
சிந்தனை என்னை விட்டு தொலைந்து போய் விட்டால்,அப்போது நான் என்னவாக ஆகிறேன்?இந்த
உடலில் உள்ள விரலை வெட்டினால் வலிக்காமல்,நிர்வாணமாக நிற்கும் போதும் பதறாமல்
உணர்வுகளை வென்று கடவுளாக மாறிவிடலாம்.
நான் என்பது யார்?நான் என்னை எவ்வாறு அடையாளப்படுத்திக் கொள்கிறேன்?ஒரு பெயரை
சொல்லி அழைக்கும்போது அது என்னுடைய பெயர்தான் என்றெனக்கு எப்படிப் புரிகிறது?இந்த
உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதருக்கும்,பொருளுக்கும் ஒரு பெயர் இருக்கிறது.அந்த
பெயர்கள் தொலைந்து போனால் மனிதர்களின்,பொருட்களின் இருப்பு எவ்வாறு நிறுவப்படும்?பெயர்கள்
தான் இருப்பா?நான் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த பொருள் ஏன் கண்ணாடி
என்றழைக்கப்படுகிறது?நம்முடைய சிந்தனையில் கண்ணாடி என்பது ஒரு பிம்பத்தை காட்டும்
பொருள் என்று எவ்வாறு நிறுவப்பட்டது?பொருட்களும் அதன் பண்புகளும் அதன் இருப்பும்
இந்த உலகத்தில் எவ்வாரு சாத்தியப்படுகிறது?நம்முடைய படிப்பினாலா அல்லது நம்முடைய
முன்னோர்களிடமிருந்தா?பெயர்களற்ற உலகம் எப்படி இருக்கும்?அங்கே இருத்தல் என்பது
என்ன?.நான் எதற்காக இங்கே இருக்கிறேன்?நான் இங்கு இல்லாமல் போனால் இந்த
பிரபஞ்சத்தின் செயல்பாடுகளில் என்ன வித மாற்றம் ஏற்படும்?கடலில் இருந்து ஒரு துளி
இல்லாமல் போனால் என்ன விதமான மாற்றத்தை அந்த கடல் அடைகிறது?ஒரு துளி அதில் சேரும்
போதும் என்ன வித மாற்றத்தை அந்த கடல் அடைகிறது?ஒரு மாற்றமும் இல்லையெனில் ஒரு
துளியின் பங்கு என்ன?கடல் என்பது என்ன?அந்த துளி சேரும் போதும் தொலையும் போதும்
கடல் அப்படியே இருக்கிறது.அந்த துளிக்கு முன்னரே அந்த கடல் அங்கே
இருந்திருக்கிறது.அந்த துளிக்குப் பின்னரும் அந்த கடல் அங்கே இருக்கிறது.ஆக எந்த
துளியில் கடல் உருவானது?எந்த துளியில் அது இல்லாமல் போகிறது?அதனில் ஒரு துளியாக
இருந்து கொண்டு அதன் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் அறிந்து கொள்ள
முற்படுவதின் சாத்தியம்,பேராற்றல் பொங்கும் பிரபஞ்சத்தின் ஒரு துளியாக இருந்து
கொண்டு பிரபஞ்சத்தின் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் அறிந்து கொள்ள முற்படும்
மனித சிந்தனையை ஒத்திருக்கிறது.நான் இருந்தாலும் இல்லாமல் போனாலும் பிரபஞ்சம்
இருக்கும்.அப்போது நான் என்பதன் அர்த்தம் என்ன?இருத்தலின் பொருள் என்ன?
அப்பொழுது “அம்மா அம்மா” என்ற ஒரு ஈனமான குரல் என் சிந்தனைகளை கலைத்தது. நான்
அது என்னவென்று என் அம்மாவிடம் கேட்டவுடன்,.மணி பண்ணிரண்டு ஆகி விட்டதென்றும், என்
வீட்டுக்கு அருகில் இருக்கும் பாஸ்கரன் சாப்பாட்டிற்கு கத்துகிறான் என்றும் அம்மா
கூறினாள்.அவனுக்கு கை கால்கள் விளங்காமல் போய் விட்ட விஷயத்தையும்,அவன் மணைவி
இறந்து போய் அவனுடைய மகன்கள் அவனை விட்டு விட, அவனுடைய அம்மா தான் அவனுக்கு
இப்போது சமைத்து போடுகிறாள் என்றும் கூறினாள்.என் வீட்டின் மொட்டை மாடியில்
இருந்து பார்த்தால் அவனுடைய வீட்டின் வாயில் தெரியும்.அடிக்கின்ற வெயிலில்
காய்ந்து கொண்டிருந்த மொட்டை மாடியில் கால்களை வைத்த உடன் தரையில் ஏறியிருந்த
சூட்டினால் பாதங்களில் பொடி ஒட்டியது.அங்கிருந்த ஒரு துணியை விரித்துப் போட்டு
அதன் மேல் நின்று கொண்டேன்.அந்த காலத்திலேயே எங்கள் தெருவில் இருந்த ஓரிரு பெரிய
வீடுகளில் அதுவும் ஒன்று.மேற்கே பார்த்த வீடு.தெருவில் இருந்து நான்கு கருங்கல்
படி வைத்து ஏற்றிக் கட்டிய வாசல்.உச்சி வெயில் பட்டு அந்தப் படிகள் எல்லாம்
கொதித்துக் கொண்டிருந்தன.அதில் அமர்ந்திருந்த பாஸ்கரனை பார்த்தேன்.கால்கள்
இரண்டும் விழுந்து போயிருந்தன.ஒரே ஒரு கை மட்டும் செயல்படும் நிலையில்
இருந்தது.சட்டை ஒன்றும் அணியாமல், அவன் கால்களுக்கு கீழே ஒரே ஒரு துணி மட்டும்
போர்த்தப்பட்டிருந்தது.அவன் நிர்வாணமாக கிடந்தான் என்று தான் சொல்ல
வேண்டும்.அவனுடைய கடந்த காலம் லௌகீக வாழ்க்கையின் உச்சம்.குடியும் கூத்தியாளும் என
அவனை கம்பீரமாகப் பார்த்திருக்கிறேன்.அவனுடைய இன்றைய இந்த நிலை மனதைப் பிசகியது.இப்படி
கஷ்டப்படுவோம் என்று தெரிந்திருந்தால் அவனுடைய கடந்த காலம் வேறு மாதிரி
இருந்திருக்கும்.அல்லது இப்படி தான் அவனுடைய நிகழ் காலமும் வருங்காலமும் இருக்க
வேண்டும் என்பதற்காக தான் அவனுடைய கடந்த காலம் அவ்வாறு இருந்திருக்க வேண்டும்.எது
எப்படியோ வாழ்க்கை ஒவ்வொரு வினாடியும் புதிராகவே இருக்கிறது.
மதிய உணவு முடித்து விட்ட பின்னும் அந்த குடைச்சல் மனதில் இருந்து கொண்டே
இருந்தது.மாலை நான்கு மணிக்கு தூங்கி எழுந்த போதிலும் அந்த குழப்பம் மட்டும் அகலாமல்
அப்படியே இருந்தது.மேற்கில் சூரியன் மெல்ல இறங்கிக் கொண்டிருந்தான்.வெயில்
தாழ்ந்து கொண்டிருந்தது.சற்று வெளியில் சென்று நண்பர்களை சந்தித்து விட்டு
வருவதற்காக கிளம்பினேன்.முதலில் மசூதி தெரு வழியாக நான் படித்த பள்ளியைத் தாண்டி
எனது நண்பன் சிவா வீட்டுக்குச் சென்றேன்.பள்ளியைக் கடந்த அந்த அரை நிமிடத்தில்
வாழ்க்கை இருபது வருடங்கள் சுழன்று வந்தது.ஆசிரியர்களின் முகங்கள் மனதில் வந்து
விட்டு மறைந்தன.அவர்களை எல்லாம் சந்திக்க வேண்டும் எனத் தோன்றியது.அவர்கள் இப்போது
எப்படி இருக்கிறார்கள் எனப் பார்க்க வேண்டும் எனத் தோன்றியது.எத்தனை நாட்கள்
அவர்களைப் பார்த்து நடுங்கியிருப்பேன்?கம்பீரமாக என்னை மிரட்டிய அவர்கள் இன்று
மூப்பு எய்தி இருப்பார்கள்.காலியாக கிடந்த அந்த கம்பவுண்டர் வீடு,இறந்து போயிருந்த
என்னுடைய தமிழ் ஆசிரியர்,அரண்மனை போன்ற வீட்டில் இருந்து விட்டு வாழ்க்கையின்
போக்கில் இன்று ஒண்டுகுடித்தனத்தில் தங்கி இருக்கும் செட்டியார் குடும்பம் என நான்
பார்த்த மிக வசீகரமான கம்பீரமான மனிதர்களின் வாழ்க்கை மாற்றம் மேலும் அச்சத்தையும்
வாழ்க்கை பற்றின கேள்விகளையுமே என்னுள் அதிகப்படுத்திக் கொண்டிருந்தது.நான்கு
நாட்கள் கழித்து ஊருக்கு கிளம்பும் வரையிலும் பதில் இல்லாத கேள்விகளாலேயே என் மனம்
ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.
நகரத்தில் அதிகாலை வந்து இறங்கியவுடன் அதன் பரபரப்பு என்னையும் தொற்றிக்
கொண்டது.ஆனால் இந்த அதிகாலையில் சாலையில் ஒன்றும் அவ்வளவு போக்குவரத்து
இல்லை.உடற்பயிற்சிக்காக ஓடி ண்டிருப்பவர்கள்,செய்திதாள்களைப் பிரித்துப்
போட்டுக் கொண்டிருப்பவர்கள்,பால் போடுபவர்கள்,சாலையை பெருக்கிக்
கொண்டிருப்பவர்கள்,தேனீர் கடைகளுக்கு வெளியில் சிகரெட் பிடித்துக்
கொண்டிருப்பவர்கள் என அதிகாலையில் மரங்களின் கிளைகளுக்கு வெளியில் விழுந்து
கொண்டிருந்த சோடியம் விளக்குகளின் வெளிச்சத்தில் சொற்ப மனிதர்களே இருந்தார்கள்.இருட்டில்
நிறைய மனிதர்கள் இருக்கலாம்.அது எனக்குத் தெரியவில்லை.
ஆட்டோ ஒன்றைப் பிடித்து பயணப்பட்டேன்.மனிதர்களின் முகங்கள் என்னைக் கடந்து
சென்றன.இந்த நகரம் மற்றொரு நாளுக்காக தயராகிக் கொண்டிருக்கிறது.இன்று,இந்த
மனிதர்களின் பலரது வீட்டில் அவர்களுக்கு பிடித்தமானவர்கள் இறந்து போகலாம்.பலரது
காதலி பிரிந்து போகலாம்.பலர் மேலதிகாரிகளிடம் வசை வாங்கலாம்.பலருக்கு பணம் வரவாகலாம்.ஆந்திராவிலிருந்தோ,பீஹாரிலிருந்தோ
பெண்கள் இறக்குமதி செய்யப்படலாம்.பலருக்கு திருமணமாகலாம். அச்சம், மகிழ்ச்சி, துயரம்,
காமம், நிம்மதி, பொறாமை என ஏதேவொரு உணர்வு நான் பார்க்கும் இந்த முகங்களுக்கு பின்
இருக்கிறது.ஆனால் அவர்களின் இருப்பு பற்றி அவர்கள் விசாரணை செய்வதேயில்லை.இங்கு
உணர்வுகள் மட்டுமே இருக்கின்றன.காலமும்,வெளியும்,ஸ்தூல உடம்பும் இருப்பைத் தாண்டி
இருக்கின்றதென தோன்றுகிறது.
Tuesday, April 17, 2012
காற்றில் மிதக்கும் சிறகு
காற்றில்
மிதந்து கொண்டிருக்கிறது சிறகொன்று
இக்காட்சியின்
அழகை கவிதையாய் பதிவு செய்திட
கவிஞன் ஒருவன் முயல்கிறான்
தலைப்பிடுகிறான்
காற்றில் மிதக்கும் சிறகென்று
எழுதி எழுதி கிழித்து எறிகிறான்
பெருமுயற்சியிலும்
அவனால் அந்த காட்சியை
அழகாக பதிவு செய்ய முடியவில்லை
வார்த்தைகளில்
அழகியல் பதிவு செய்யப்படாமல்
துன்பியலே பதிவு செய்யப்படுகிறது
பெருவெளியில்
சிறகின் தனிமையும்
பற்றிக் கொள்ள ஏதுமில்லாமல்
பதட்டமாய் காற்றின் போக்கில் அலைவதுமென
ஒரு பொருளின் துயரமே
அவனது வார்த்தைகளாய் வடிவம் பெறுகின்றன
இப்பொழுது
கவிதையை திருத்தி தலைப்பிடுகிறான்
காற்றில் அலையும் சிறகென்று
பிறகு
கவிதையை கிழித்து எறிந்து விட்டு
அவனது அறையின் இருண்ட மூலையில்
ஒளிந்து கொள்கிறான் தனிமையில்
மிதந்து கொண்டிருக்கிறது சிறகொன்று
இக்காட்சியின்
அழகை கவிதையாய் பதிவு செய்திட
கவிஞன் ஒருவன் முயல்கிறான்
தலைப்பிடுகிறான்
காற்றில் மிதக்கும் சிறகென்று
எழுதி எழுதி கிழித்து எறிகிறான்
பெருமுயற்சியிலும்
அவனால் அந்த காட்சியை
அழகாக பதிவு செய்ய முடியவில்லை
வார்த்தைகளில்
அழகியல் பதிவு செய்யப்படாமல்
துன்பியலே பதிவு செய்யப்படுகிறது
பெருவெளியில்
சிறகின் தனிமையும்
பற்றிக் கொள்ள ஏதுமில்லாமல்
பதட்டமாய் காற்றின் போக்கில் அலைவதுமென
ஒரு பொருளின் துயரமே
அவனது வார்த்தைகளாய் வடிவம் பெறுகின்றன
இப்பொழுது
கவிதையை திருத்தி தலைப்பிடுகிறான்
காற்றில் அலையும் சிறகென்று
பிறகு
கவிதையை கிழித்து எறிந்து விட்டு
அவனது அறையின் இருண்ட மூலையில்
ஒளிந்து கொள்கிறான் தனிமையில்
Sunday, March 11, 2012
Apropos of the Wet Snow
When from out of error's daarkness
With a word both sure and ardent
I had drawn the fallen soul,
And you,filled with deeper torment,
Cursed the vice that had ensnared you
And so doing wrung your hands;
When,punishing with recollection
Forgetful conscience,you then told
The tale of all that went before me,
And suddenly you hid your face
In trembling hands and,filled with horror,
Filled with shame,dissolved in tears,
Indignant as you were,and shaken....
Etc.,etc.,etc.,
From the poetry of N.A.Nekrasov

Wednesday, March 7, 2012
ஒரு முன்னுரை..ஒரு குடிகாரன்...ஒரு முடிக்கப்படாத சிறுகதை
ஒரு முன்னுரை..ஒரு குடிகாரன்...ஒரு முடிக்கப்படாத சிறுகதை
முன்னுரை....
என் நண்பன் அவன் சிறுகதைக்கு முன்னுரை வழங்குவதற்காக மிகப் பெரிய எழுத்தாளனாகிய என்னை அணுகினான். நானும் விளம்பரத்துக்காக ஒத்துக் கொண்டேன். நன்றாக குடித்து விட்டு சிறுகதை எழுத ஆரம்பித்தான்.குடித்து குடித்து எழுதினான்.பாதி போதையில் மட்டையாகி படுத்து எழுதினான்.அவனுடைய குறிப்புகளை தொகுத்து கீழே வழங்கியிருக்கிறேன்.நிறைய எழுத்துப் பிழை,இலக்கணப் பிழை இருக்கும்.ஏனென்றால் இதை எழுதியவன் ஒரு குடிகாரன்.இந்த சிறுகதையில் அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதுவும் அதன் முடிவும் எனக்குப் புரியவும் இல்லை கிடைக்கவும் இல்லை.இதனை புரிந்து கொள்ளும் facebook,blog வாசகர்களே..தயவு செய்து அடியேனின் அறிவை விருத்தி செய்யுங்கள்.இனி குடிகாரனின் முடிக்கப்படாத சிறுகதை....
சிறுகதை...
அந்த வார இதழின் சிறுகதை பகுதியில் அந்த சிறுகதையையும் அதன் கீழ் இருந்த பெயரையும் பார்த்தவுடன் எனக்கு புரிந்து போனது.அந்த கதையை எனது நண்பன் சீனிவாச செட்டியார் தான் எழுதி இருக்க வேண்டும் என்று.கடைசி கடைசியாக தன்னுடைய ஐம்பதாவது வயதில் முதல் சிறுகதையை முடித்து,அதனை அவர் விரும்பியது போல ஒரு இலக்கியப் பத்திரிகையிலும் வெளியிட்டு விட்டார் என்று நான் முடிவு செய்து விட்டேன்.அப்படி இருக்கும் பட்சத்தில் இந்நேரம் மனிதர் தலை கால் புரியாமல் ஆடிக் கொண்டிருப்பார்.அதனால் அவரை தொந்தரவு செய்ய விரும்பாமல்,மாலை அலுவலகம் முடிந்து வரும்போது சந்தித்து அவருக்கு பிடித்தமான கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர் பாவையும் கையில் திணித்து விட்டு வாழ்த்து சொல்லி விடலாம் என்ற எண்ணத்துடன் என்னுடைய அலுவலகத்துக்கு கிளம்பி விட்டேன்.நான் அலுவலகம் முடித்து விட்டு நமது செட்டியாரை பார்க்க மாலை ஆகி விடுமாதலால், இந்த இடைவெளியல் வாசகர்களாகிய நீங்களும் நமது செட்டியாரை பற்றி தெரிந்து கொள்ள ஏதுவாக அவருடைய சரிதையை சொல்லி விடுகிறேன்.பொறுமையாக அமர்ந்து மாலை வரை பின் வருவனவற்றை படித்துக் கொண்டிருங்கள்.அப்பொழுது தான் நான் மாலையில் செட்டியாரை சந்தித்து வாழ்த்து சொல்லும் போது,உங்களுக்கும் வாழ்த்து சொல்ல தோன்றும்.

முதலில்,நமது செட்டியாரின் வயது ஐம்பது என்பதாலும்,நான் அவருடைய நண்பன் என்பதாலும்,எனக்கும் ஐம்பது வயது என்று நீங்கள் தவறாக நினைத்து விடக் கூடாது.நான் இன்னும் வரன் தேடிக் கொண்டிருக்கும் முப்பதை தாண்டாத பையன்.பிறகு எப்படி செட்டியார் என் நண்பன்?
எப்படியாவது ஒரு சிறுகதை எழுதி தானும் ஒரு சிந்தனைவாதி ஆக அங்கீகாரம் பெற்று விட வேண்டும் என்று கொள்ளை ஆசை கொண்டிருப்பதாக அன்று நான் ரயிலில் சந்தித்தபோது செட்டியார் கூறியது இன்று இந்த சிறுகதை தலைப்பின் கீழ் அந்த பெயரைப் பார்த்த போது நினைவுக்கு வந்தது.ஏனென்றால் தன் சிறுகதை ஏதோவொரு நாளேட்டிலோ வார ஏட்டிலோ வரும் போது தான் தன்னுடைய புனைப் பெயராக "உயிர் எழுத்தாளன்" என்ற பெயருடன் அந்த சிறுகதையை வெளியிடச் சொல்வேன் என்று அந்த சந்திப்பின் போது செட்டியார் சொல்லியிருந்தார். இன்று அந்த பெயருடன் ஒரு சிறுகதை நான் கையில் வைத்திருக்கும் இலக்கியப் பத்திரிக்கையில் இருப்பதாலும்,இது போன்ற மொக்கைப் பெயர்களை சில மொக்கை மனிதர்களால் மட்டுமே யோசிக்க முடியும் என்பதாலும் இந்த சிறுகதை அவரால் தான் எழுதப்பட்டிருக்கும் என்று முடிவுக்கு வந்து விட்டேன்.அது என்ன "உயிர் எழுத்தாளன்" என்று நான் கேட்டதற்கு அவர் கொடுத்த விளக்கம் இருக்கிறதே.எனக்கு சொல்லத் தோன்றியதெல்லாம்,"இதை தஞ்சாவூர் கல்வெட்டுல பதிச்சு வச்சிட்டு அதுக்கு பக்கத்திலேயே நீயும் உட்கார்ந்துக்க.பின்னாடி வர்ற சந்ததியினர் இதப் படிச்சு பயன் பெறட்டும்".மனதில் மட்டுமே இதை நினைத்துக்கொண்டு வெளியில் சிரித்து வைத்தேன்.அவர் கொடுத்த விளக்கம் யாதெனின்,"அதாவது உயிர் எழுத்தாளன் என்பதற்கு அர்த்தங்கள் பல உள.பொதுவான அர்த்தமாக இரண்டு அர்த்தங்களை கொள்ளலாம்.ஒன்று எழுத்தையே உயிராக கொண்டவன்.மற்றொன்று தமிழில் உயிர் எழுத்துக்கள் உள்ளதால்,உயிர் எழுத்தாளன் என்று பெயர் கொண்டவன் தமிழை மிகவும் நேசிப்பவன் என்றும் கொள்ளலாம்." என்று கூறி முடித்தார்.
இதோடு இந்த மனிதரின் சகவாசத்தை முறித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன்.அந்த ரயில் AC கம்பார்ட்மெண்டில் வேறு யாரும் இல்லாத காரணத்தால்,நீங்கள் எப்படி உங்கள் விதியை நொந்தபடி வேறு வேலை இல்லாமல் இதைப் படித்துக் கொண்டிருக்கிறீர்களோ அதனை போலவே நானும் அவரை தவிர்க்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.அப்பொழுது தான் வந்தது இயற்கை உபாதை.அவர் சொல்ல சொல்ல கேட்காமல் முந்தைய ஸ்டேஷனில் நான் சாப்பிட்ட bread omlete குடலைப் பிடுங்கிக் கொண்டு வந்தது.மனிதனுக்கு எந்த போக்கு வந்தாலும் தாங்கிக் கொள்ளலாம்.ஆனால் இந்த வயிற்றுப் போக்கு?அதுவும் பொது இடத்தில்?இதனை விட கொடூரமான தண்டனை மனிதனுக்கு இல்லை.இது போன்ற நேரத்தில் அனுசரணையாக நடந்து கொள்ளும் எவரையும் நாம் கேலி செய்யக் கூடாது.அதற்காக அனுசரணை என்ற பெயரில் செட்டியார் எனக்கு கழுவி எல்லாம் விடவில்லை.வயிற்றுப் போக்கின் போது அனுசரணையான செய்கைகள் என்ன என்பதனை விளக்குவது இந்த சரிதைக்கு தேவை இல்லாதது என்பதனால்,அவர் என்னிடம் அனுசரணையாக நடந்து கொண்டார் என்பதோடு முடித்துக் கொள்வோம்.ஆக ரயில் போக்கில் போய்க் கொண்டிருந்த நாங்கள் என்னுடைய வயிற்றுப் போக்கினால் நண்பர்கள் ஆனோம்.இதனை தர்க்கம் செய்பவர்களும்,ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களும் தயவு செய்து இதனை படிப்பதை நிறுத்தி விட்டு உங்கள் வேலையை பாருங்கள்.தர்க்கம் செய்யாதவர்கள்,ஒரு வயிற்றுப் போக்கின் மூலமாக உருவான நட்பை பற்றி நம்பி மேலும் தொடர்க.
பிறகு மெல்ல இருவரும் பல உலக சமாசாரங்களைப் பேசியபடி எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.அவர் ஒரு இலக்கியவாதியாக அங்கீகாரம் பெற்று விட வேண்டும் என்று தலை கீழ் கரணங்கள் போட்டுக் கொண்டிருப்பதாக வருத்தத்துடன் கூறினார்.அதில் என்ன அவ்வளவு கடினங்கள் இருக்கிறதா என்ற என்னுடைய கேள்விக்கு அவர் கூறிய பதில்..
"எல்லோருக்கும் புரிகிறபடிக்கு கதைகள் எழுதுவது சுலபம்.ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே புரிவது போல் கதைகள் எழுதுவது கடினம்"
"ஆனாலும் எல்லோருக்கும் புரிவது போல் ஏன் கதைகளை நீங்கள் எழுதக் கூடாது??"
"அங்கு தான் இருக்கிறது இலக்கிய கதைகளின் சூட்சுமம்.அதாவது,எல்லோருக்கும் புரிவது போல் எழுதி விட்டால் நீ வெகுஜன எழுத்தாளன் ஆகிவிடுவாய்.முதலில் நீ இலக்கிய எழுத்தாளனாக அங்கீகாரம் பெற வேண்டுமானால் யாருக்கும் புரியாத மாதிரி எழுத வேண்டும்" என்று கூறி முடித்து விட்டு என்னை உலகம் தெரியாத அப்பாவி என்றும் எனக்கு இன்னும் இலக்கிய வளர்ச்சி வேண்டும் என்றும் சொல்லி முடித்தார்.அதோடு விட்டாரா மனிதர்.ஒரு இலக்கிய கட்டுரையின் தகுதிகளாக அவர் விளக்கினார்.நானும் பிள்ளையிடம் பாடம் படித்த அப்பனைப் போல அவரிடம் பாடம் கேட்டேன்.அவர் கூறியதாவது..

சாமி நான் மட்டை....அவரோட விளக்கத்துல இல்ல...இந்த mansion house-ல...
இனிமே இது சிறுகதை இல்ல...ஒரு தொடர்கதை :) :) :)
இனிமே இது சிறுகதை இல்ல...ஒரு தொடர்கதை :) :) :)
Sunday, November 6, 2011
மாலை நேரம்
சலனமில்லாத மாலை நேரம்.ஒரு துளி மேகத்தைக் கூட வானத்தில் காண முடியவில்லை.கண்ணுக்கு எட்டுகிற தூரம் வரை ஒரு கட்டிடமும்,மனிதர்களும் இல்லை.ஆங்காங்கே ஓரிரு மரங்கள் காட்சிக்கு தெரிகின்றன.ஆனால் அதன் ஒரு இலையைக் கூட காற்று அசைக்கவில்லை.ஒரு புகைப்படம் போலதான் காட்சி கண்களுக்கு தெரிகின்றது.என் முதுகுக்குப் பின்னால் சூரியன் மறைந்து கொண்டிருக்கிறான்.ஒருவிதமான மங்கலான மஞ்சள் வெளியில் சிறு சிறு துகள்கள் புழுதியாக காட்சி கண்களின் வழியே மனதிலும் மூளையிலும் பதிந்து கொண்டிருக்கிறது.இருளும் அமைதியும் காட்சிகளாக மாறப் போகும் தருணத்திற்காக மனம் காத்துக் கிடக்கிறது.ஒரு விதமான அழுத்தம் மனமெங்கும் வியாபிக்க ஆரம்பிக்கிறது....
வாழ்க்கையைப் பற்றின நினைவுகளும்,அச்சமும் அதிகரிக்க ஆரம்பிக்கின்றன.
Monday, October 17, 2011
நரகத்திலேயே தங்கி விட்ட நான்
புனித நூல்களில் வர்ணிக்கப்பட்டுள்ள நரகங்களை
காணும் பேரிச்சையோடு
சிவனை நோக்கி கடுந்தவம் இருந்தேன்
இதிகாசங்களிலும்
புராணங்களிலும்
காட்சி அளித்தது போல்
சிவன் தோன்றினான்
வரம் வேண்டினேன்
நரகத்திற்குச் சென்றேன்
பரிணாம மாற்றங்களோடு
எனக்கு நானே சுமையாக
என்னை நானே சுமக்கும்படிக்கு
என் முதுகில் கூன் இருந்தது
கூனனாக நரகத்திற்குள் நுழைந்தேன்
வெளிச்சமே இல்லாத நரகத்தை
என்னால் அனுபவிக்க முடியவில்லை
மீண்டும் உலகிற்கு வர விரும்பினேன்
நரகத்திற்கும் உலகிற்கும் ஆயிரம் படிகள்
கூனை சுமந்து கொண்டு
உலகிற்கு நடக்க ஆரம்பித்தேன்
என்னை நானே சுமந்து கொண்டு
உலகிற்கு நடக்க ஆரம்பித்தேன்
நரகத்திற்கும் உலகிற்கும்
கருங்கற்களால் ஆன ஆயிரம் படிகள்
பிடிமானம் அற்ற அந்த ஆயிரம் படிகளில்
கூனை சுமந்து நான் நடக்கத் துவங்கினேன்
என்னை நானே சுமந்து நடக்கத் துவங்கினேன்
மேல் படியில் சிவன் இருக்கிறான்
அவனை நோக்கி நடக்கிறேன்
என்னால் இயலவில்லை
நான் சுமை தாங்காமல்
வழுக்கி விழுகிறேன்
என்னுடைய வீழ்ச்சி
ஒருமுறை அல்ல
படிக்கு ஆயிரம் முறை
நான் ஓலமிடுகிறேன்
நான் கதறுகிறேன்
நான் அழுகிறேன்
ஆனாலும்
என்னுடைய கூனையும்
நான் தாங்கும் சுமையையும்
கரைக்க என்னை முடியவில்லை
சிவனும் இறங்கி வந்து
என்னை அழைத்துச் செல்லவில்லை
என்னால் இயலவில்லை
சிவன் இறங்கி வந்து
என்னை அழைத்துச் செல்லவே இல்லை
அவன் வரப்போவதும் இல்லை
நான் நரகத்திலேயே தங்கி விடுகிறேன்
இதுவே நான்
Monday, September 26, 2011
From "DEMONS"
It seems,in fact,as though the second half of a man's life is usually made up of nothing but the habits he has accumulated during the first half
Wednesday, September 7, 2011
நான் ஒரு மன நோயாளி
என்னை ஒரு மன நோயாளியாக
பிரகடனப்படுத்துங்கள்
என்னை நீங்கள்
கல்லால் அடித்து கொன்று விடுங்கள்
என்னை நீங்கள் நிர்வாணப்படுத்தி
நான் கதற கதற
என் விதைப்பைகளை அறுத்து எறியுங்கள்
நான் எல்லையில்லா வானத்தை அளக்கும் சிட்டுக்குருவி
நான் மரங்களுக்கிடையில் ஊடுருவி ஒளிரும் சூரியக்கதிர்
நான் கடல் அலைகளின் நுரைகள்
நான் ஒரு பிறப்பில் உடையும் நீர்
நான் ஒரு இறப்பில் எரியும் தீ
நான் புணர்ச்சியில் உள்ளே செல்லும் ஆண்குறி
நான் புணர்ச்சியில் உள் வாங்கும் பெண் குறி
நான் ஒரு மன நோயாளி
நீங்கள் ஒரு நடிகனின்
ரசிகனாக இருப்பீர்கள் என்றால்
நீங்கள் ஒரு அரசியல்வாதியின்
தொண்டனாக இருப்பீர்கள் என்றால்
என்னுடைய வரிகளைப் படிக்காதீர்கள்
நான் ஒரு மன நோயாளி
என் விதைப்பைகைளை அறுத்த பின்னும்
கோபம் தீரவில்லையெனில்
என் மனைவியின் மார்புகளை
அறுத்து எறியுங்கள்
அவள் பெண்மை பிரபஞ்சத்தில் கரைந்து போகட்டும்
Sunday, August 14, 2011
நூற்றாண்டுகளின் பசி - சாருவின் தேகம் நாவலிலிருந்து
இந்த கவிதை சாருவின் தேகம் நாவலிலிருந்து நான் என் மெய் சிலிர்த்து,உள் மனம் நடுங்கி,ஆன்மா அதிர்ந்து,என் சிறு அறிவால் விவரிக்க முடியாத உணர்வுகளோடு படித்த...படிக்கின்ற...படிக்க போகும் கவிதை.
I do not know if I am breaching any copyright issue here...or may be Charu himself might sue me for publishing his writing in my blog without his permission.But I am publishing this to make all people understand how important it is to celebrate our own writers.
நூற்றாண்டுகளின் பசி
இரைக்காகக்
காத்துக்கொண்டிருக்கும்
வனமிருகம் நான்
நூற்றாண்டுகளின் பசி
என் தேகமெங்கும் தீயாய்
கனன்று கொண்டிருக்கிறது
இரவும் பகலும்
பருவ காலங்களும்
வந்து போகின்றன
என் மௌன உறுமலில்
வனவிருட்சங்கள்
நடுக்கமுற்று சிலிர்க்க
பட்சிகள் ஓலமிடுகின்றன
என் இரை
என்னை நோக்கி
வந்துகொண்டிருப்பது
எனக்குத் தெரியும்
இரையின்
மாமிச வாடை
நாசியைத் துளைக்கிறது
இரையே
விரைந்து வா
உன் குரல்வளையில்
என் பற்கள் பதியும் போது
உன் கண்களில் தெரியும்
பீதியும் உயிர்த்தாபமும்
கண்டு நான்
பரவசம்
கொள்ள வேண்டும்
உன் குருதி நக்கி
என் விடாய் தீர வேண்டும்
உன் மாமிச ருசியின்
ஞாபகம் கொண்டு
வணதேவதைகளிடமும்
விருட்சங்களிடமும்
புலம்புகின்றேன்
அதைக் கேட்டு
வனதேவதைகளில் ஒன்று
சொன்னது நான்தான் உன்
இரையென
உன் மாமிச வாடையறிந்த
எனக்கா தெரியாது
தேவதைகளின் தந்திரம்
அவ்விடம் அகன்று
மலையடிவாரம் வந்தேன்
நட்சத்திரங்களுக்குக் கதை
சொல்லிக்கொண்டிருந்த
ஆதிக்கிழவியொருத்தி
என்னை நிறுத்தி
என் முன் ஜென்மத்து
ஞாபகப் படுக்கையில்
கிடத்தினாள்
கடும்பாலையில்
தனிமை கொண்டிருக்கும்
சர்ப்பம்
வானிலிருந்து வீழுமொரு
தாரகை
செம்பருத்தி மலர்
எருமையின் முதுகுப் புண்ணில்
நெளியும் புழு
தர்மனைத் தொடரும் நாய்
தீர்கதரிசியை முத்தமிட்டுக்
காட்டிக் கொடுப்பவன்
மகனால் ஆண்குறி அறுத்தெரியப்பட்டுக்
கதறும் ஓரணோஸ்
ராணி புணர்ந்த புரவி
ஆணை அடித்த பாகன்
சமரிலே புறமுதுகிட்டு ஓடும்
படைவீரன்
கலவியறியாத நிதம்பம்
உறங்கியறியாத அக்கினி
பெயர் அறியாத பித்தனென
எத்தனைஎத்தனையோ
கண்டு வீறிட்டலறி
ஞாபக இரைச்சல்
துரத்தி வர
மாறுவேடம் பூண்டு
வனத்தின் இருளில்
கரையலானேன்
இரையே
என்னை அடையாளம்
கண்டு கொள்
என் மனம் சுவாசித்து...
Thursday, July 28, 2011
மற்றும் அனைத்து ஆன்மாக்களையும்
மற்றும் அனைத்து ஆன்மாக்களையும்
படைத்த இறைவனே இந்த ஆன்மாவையும் படைத்தான்
ஆனாலும்
இந்த ஆன்மா மட்டும்உன்னதமானதாக உருப்பெற்றது
படைப்பின் புரியாத ரகசியமே
மற்ற ஆன்மாக்கள்
மற்ற ஆன்மாக்களை கற்பழித்த போது
மற்ற ஆன்மாக்கள்
மற்ற ஆன்மாக்களை காயடித்த போது
இந்த ஆன்மா மட்டும் கசிந்தது
மற்ற ஆன்மாக்கள் பசித்திருந்தபோது
மற்ற ஆன்மாக்கள் மரணித்தபோது
இந்த ஆன்மா மட்டும் கசிந்தது
இந்த ஆன்மா
இதனாலலேயே
இறைவனின் இருப்பு மேல்
ஐயம் கொண்டது
இறைவனை விமர்சிக்க ஆரம்பித்தது
இறைவனை இல்லை என்றது
மற்றும் கூடின மற்ற ஆன்மாக்கள்
இந்த உன்னத ஆன்மாவையை விமர்சிக்க
இருப்பை இல்லாமலாக்க
நிர்வானபடுத்த
கொட்டைகளை அறுக்க
குறியை நெருப்பில் காய்ச்ச
இறந்தது உன்னத ஆன்மா நிர்வாணத்தில்
விழித்து எழுந்தது இறைவனின் மடியில்
கேள்வி:
உன்னத ஆன்மாவை சிதைக்க??????
உன்னத ஆன்மாவை வதைக்க?????
ஏன் மற்றும் சில ஆன்மாவை படைத்தீர்????
பதில்:
இறைவனாகிய நான்
ஆன்மாவை படைத்தேன்
வதைகள் இல்லை
வாதைகள் இல்லை
ஆன்மாக்களாகிய நீங்கள்
இறைவனை படைத்தீர்கள்
வதைகள் உண்டு
வாதைகள் உண்டு
Wednesday, July 13, 2011
உன்னுடன் ஆன என்னுடைய உறவு
உன்னுடன் ஆன என்னுடைய உறவு ஒரு சூரிய ஒளி புக முடியாமல் சிறு சிறு கோடுகளாக விழுந்து கொண்டிருக்கும் அடர்ந்த கானகத்தில் பிரமிப்போடு நிற்கும் மனிதனைப் போல உள்ளது.அருவிகளின் பேரிரைச்சலும்,விலங்குகளின் ஓலமும்,பறவைகளின் சப்தமும்,பூச்சிகளின் இடைவிடாத காதுகளை வலிக்கச் செய்யும் சப்தமும்,அலறலும் என மிகுந்த பயத்தை ஏற்படுத்துகிறது.வெற்றுடம்போடு நின்று கொண்டிருக்கும் என்னுடைய மார்பில் குளிர் காற்று நெருஞ்சி முட்களைப் போல அவஸ்தையை ஏற்படுத்துகிறது.முதுகெலும்பின் வழியே ஒரு சில்லிப்பு பரவி பின் கழுத்தில் இம்சை கொடுக்கிறது.இலைகளின் வாசமும்,நான் நின்று கொண்டிருக்கும் ஈர சேற்றைப் போன்ற மணலின் வாசமும்,மரப் பட்டைகளின் ஈரமும் இதயத்திலும் நுரையீரலிலும் பரவி என் சுவாசத்தின் வழியே வெளியேறி இந்த காட்டையே உஷ்ணப்படுத்துகிறது.இந்த அச்சம்,பரவசம்,பிரமிப்பு,உடல் வாதை,சுவாசத்தில் சுகம்,இம்சை,அவஸ்தை--இவை அனைத்தும் தான் உன்னுடன் ஆன என்னுடைய உறவு
Sunday, June 19, 2011
அவன் இவன் – மரணத்தின் துயரமும்,துயரத்தின் இரக்கமின்மையும்
விளிம்பு நிலை மனிதர்கள்,இயல்பு மீறிய மனிதர்கள்,மனப்பிறழ்வும்,சமூக வாழ்வின் ஒழுங்கின்மையும்,உறவுகளின் சூன்ய தன்மைகள்,இருப்பின் கொடூரமும்,அவலமும்,வதையும் என வாழ்வின் இருத்தலியல் துயரங்களை தனது படைப்புகள் மூலமாக விவாதிக்கும் ஒரு படைப்பாளியின் புதிய படைப்பு.படத்தின் இறுதி காட்சிகளில் தன்னுடைய சமூகம் மீதான கோபத்தையும்,மரணத்தின் கொடூரத்தையும் வெளிப்படுத்தி இதயத்தில் ஒரு அழுத்தத்தையும்,ஆன்மாவில் கதறலையும் ஏற்படுத்தி விட்டார்.அந்த இறுதி காட்சிகள்.....ஒரு மனிதனுக்கு மரணம் என்பது எவ்வளவு அழுத்தமானது என்பதையும்,அதன் கொடூரமான அவஸ்த்தையையும் இவ்வளவு அழுத்தமாக வெளிப்படுத்த முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை.
Monday, February 14, 2011
சாத்தான்களும் தேவதைகளும்
ஒரு நெடிய உறக்கத்தில் இருக்கிறேன்
ஆனால்
நான் உறங்குகிறேன் என்பதை
நான் உணருவதில்லை
கனவுகளில் இருந்து விழிக்கும் வரை
நான் எப்போதும்
ஒரே கனவை காண்கிறேன்
கனவிலும்
நான் உறங்கிக் கொண்டே இருக்கிறேன்
அறையின் அனைத்து
மூலைகளில் இருந்தும்
சாத்தான்கள் என்னை நோக்கி நகர்கின்றன
அவை
என்னை நெருங்கியவுடன்
விழித்துக் கொள்கிறேன்
சத்தமிட்டு தேவதையை அழைக்கிறேன்
சாத்தான்கள் பயந்து ஓடி
அறையின் மூலைகளில்
இருளில் நடுங்கி அமர்ந்து கொள்கின்றன
மறுபடியும் உறங்குகிறேன்
சாத்தான்கள் நெருங்குகின்றன
மறுபடியும் விழிக்கிறேன்
தேவதையை அழைக்கிறேன்
சாத்தான்கள் ஓடி விடுகின்றன
இந்த
சாத்தான்களை விரட்டும் விளையாட்டில்
மனம் திருப்தி கொள்கின்றது
முடிவில்லாமல் விளையாடுகிறேன்
இந்த விளையாட்டை
எப்போதாவது உறக்கம் கலைகிறது
கனவுகளிலிருந்து மீள்கிறேன்
ஆனால்
மனம் இந்த விளையாட்டை
மிகவும் விரும்புகிறது
ஆனால்
நான் உறங்குகிறேன் என்பதை
நான் உணருவதில்லை
கனவுகளில் இருந்து விழிக்கும் வரை
நான் எப்போதும்
ஒரே கனவை காண்கிறேன்
கனவிலும்
நான் உறங்கிக் கொண்டே இருக்கிறேன்
அறையின் அனைத்து
மூலைகளில் இருந்தும்
சாத்தான்கள் என்னை நோக்கி நகர்கின்றன
அவை
என்னை நெருங்கியவுடன்
விழித்துக் கொள்கிறேன்
சத்தமிட்டு தேவதையை அழைக்கிறேன்
சாத்தான்கள் பயந்து ஓடி
அறையின் மூலைகளில்
இருளில் நடுங்கி அமர்ந்து கொள்கின்றன
மறுபடியும் உறங்குகிறேன்
சாத்தான்கள் நெருங்குகின்றன
மறுபடியும் விழிக்கிறேன்
தேவதையை அழைக்கிறேன்
சாத்தான்கள் ஓடி விடுகின்றன
இந்த
சாத்தான்களை விரட்டும் விளையாட்டில்
மனம் திருப்தி கொள்கின்றது
முடிவில்லாமல் விளையாடுகிறேன்
இந்த விளையாட்டை
எப்போதாவது உறக்கம் கலைகிறது
கனவுகளிலிருந்து மீள்கிறேன்
ஆனால்
மனம் இந்த விளையாட்டை
மிகவும் விரும்புகிறது
Sunday, December 19, 2010
உன்னுள் மோட்சம் கொள்கிறேன்
அன்புள்ள நாஸ்தென்கா,
இந்த அற்புதமான உலகின் மனிதர்களெல்லாம்,இறைவனின் மிகச் சிறந்த படைப்பான இயற்கையின் எல்லைகளை மீறி இயங்குவது எதனால்?சக மனிதனை நேசிக்க மறந்து,மரணத்தை மீறி இயங்குவது எதனால்?ஆழ் மனதின் நினைவுகளில் இருந்து எழும் கேள்விகளுக்கு விடை காண முயன்று நான் தோற்று விழுவது எதனால்?வாழ்க்கையின் பின்னல்கள் அனைத்தும் ஒரு சிலந்தியின் வலையைப் போலவே இருக்கிறது.சிலந்தி வலையின் ஏதோ ஒரு மூலையில் வந்து விழும் தூசியின் அதிர்வுகள் சிலந்தியின் இருப்பினை ஆக்ரோஷமாக அசைப்பது போலவும்,ஒரு நெடிய அமைதியான சூழலின் உறக்கத்தில் ஒரு கோயில் மணியின் சப்தம் இதயத்தில் வலி ஏற்படுத்தி முதுகுத் தண்டின் வழியே பாய்ந்து சென்று மூளையில் சுரீரென குத்துவது போலவும்,என் இருப்பிலும் இதயத்திலும் சலனம் ஏற்பட்டுக் கொண்டேயிருந்த ஒரு மாலை நேரத்தில் நீ வந்தாய்.அந்தி மயங்கும் நேரத்தில்,சூரிய உதயத்தை விடவும்,நிலவின் மயக்கத்தை விடவும்,அதிகம் ரம்மியத்தைக் காண்பவன் நான்.பறவைகளும்,மக்களும்,விலங்குகளும் தங்கள் கூட்டை நோக்கி ஓடும் நேரமது.வெயிலின் வெப்பம் குறைந்து,குளிர்ந்த காற்று வீசி,மேய்ச்சலுக்குப் போன ஆடுகளும்,மாடுகளும்,கோழிகளும் மந்தைகளாக பட்டிகளை நோக்கி ஓடும் நேரமது.சலசலத்து கூழாங் கற்கள் மேல் தன் சப்தத்தை எழுப்பியபடி,கரையோர நாணல்களை வளைத்து,காற்றை ஈரமாக்கி ஓடும் நதிகளின் நீரில்,மங்கிய தன் ஒளிக் கற்றைகளை வீசி நீரினை இளஞ் சூடாக்கி பூமிக்குள் தன்னைப் புதைத்துக் கொண்டிருக்கும் சூரியனின் சிவந்த மஞ்சள் வண்ணத்தினால் மேகங்கள் அனைத்தும் கூட்டம் கூட்டமாக சிவந்து கிடக்கும் நேரமது.ஆர்ப்பாட்டங்கள் அடங்கி ஒரு பேரின்ப மயக்கமான அமைதி எல்லாத் திசைகளிலும் வியாபித்து கிடக்கும் இந்த நேரத்தில் நீ வந்தாய்.
நாஸ்தென்கா...தனிமையின் அமைதியில் இன்பம் இருக்கும் அதே அளவில்,மிக குரூரமான,ஆன்மாவைக் குலைக்கும் சக்தியும் இருக்கிறது.இந்த தனிமையின் துயரத்தில் நான் கரைந்து கொண்டிருந்த நேரத்தில் தான் நீ வந்தாய் .பசியில் கத்தி,அம்மாவின் முலைக் காம்புகளை தேடி வாயில் வைத்து,அவள் இடுப்பில் அமைதியாக நிறைவுடன் தஞ்சமென அமரும் ஒரு சிறு குழந்தையைப் போலவே என் மனம் உன்னை நோக்கி ஓடியது.பாரதியின் சாக்தமென சக்தியின் வழிபாட்டை உன்னிடம் கண்டேன்.பராசக்தியாக,மகா காளியாக,என் மோட்சத்தின் வழியாக உன்னைக் கண்டு உருகி நின்றேன்.கல்லறைகளின் குழிகளில் உடைந்து கிடக்கும் மண்டை ஓடுகளில்,மெல்ல ஊர்ந்து செல்லும் கொடிய நாகத்தை மட்டுமே பார்த்து கொண்டிருந்த மனம் அன்று தான் அந்த கல்லறைகளின் ஓரங்களில் பூத்துக் கிடந்த மலர்களையும் பார்க்கப் பழகிக் கொண்டது.உன்னை காதலிக்க ஆரம்பித்த நொடிகளில்,அந்த மாலையின் மயக்கத்தை விடவும்,மனம் மயங்க ஆரம்பித்த நேரமது.வாழ்வின் வினாடிகள் அனைத்தும் புதியதாக உருவம் பெற்று நின்ற நேரமது.இந்த பிரபஞ்சத்தின் எல்லை இல்லாத அழகையும்,படைப்பின் பேரியக்கத்தையும் உனக்குள் நான் கண்ட நேரமது.காலையின் இளவெயிலில் மெல்லிய காற்றில் குளிருக்கு இதமாக கைகளை நெஞ்சுக்கு குறுக்காக கட்டிக் கொண்டே ஒரு கோப்பைத் தேநீரைத் தேடி காற்றில் பறக்கும் பறவையைப் போல நடந்து திரிகிறேன்.எல்லையற்ற அந்த வானத்தின் எல்லைகளை அளந்து விடுவது போல ஒரு வானம்பாடி பறவை,தனக்கும் அந்த வானத்துக்கும் உள்ள காதலை பாடிக் கொண்டே செல்கிறது.காற்றில் கரைந்து விடும் ஒரு பறவையின் மெல்லிய உடலைப் போல,என் மனமும் பாரம் நீங்கி இயற்கையின் பேரழகில் கரைந்து விடுகிறது.உலகின் அழகியல் காட்சிகள் அனைத்தும் உன் கண்களின் வழியே வெளிப்படுகிறது.ஈரம் தங்கி விட்ட ஒரு நிலத்தில்,கால்களில் செருப்பை அணியாமல்,ஒரு ஓங்கிய பனை மரத்தின் நுங்கை கைகளால் நக்கி நக்கி விழுங்கும் ஒரு சிறுவனைப் போல ஒவ்வொரு வினாடியும் உன் நினைவுகளை நினைத்து நினைத்து மகிழ்ந்து கிடக்கிறேன்.
நாஸ்தென்கா...மரங்களில் எனக்குப் பிடித்த எலுமிச்சை மரங்களின் வாசமும்,பூக்களும் நிறைந்து கிடந்த ஒரு எலுமிச்சை தோட்டத்தில் அமர்ந்து வெறித்துக் கிடந்த வானத்தைப் பார்த்தபடியே படுத்துக் கிடந்தேன்.உடைகளை எல்லாம் களைந்து விட்டு உன்னைப் புணர்ந்து,உன் உடலின் சதைகளையும்,வாசத்தையும்,நாற்றத்தையும்,வனப்பையும் அள்ளி அள்ளிப் பருகிக் கிடந்த வினாடிகள் அனைத்தும் இருண்டு கிடந்த வானத்தில் மின்னிய நட்சத்திர சிதறல்களில் காட்சிகளாக நிறைந்து கொண்டிருந்தன.நிலவின் ஒளியில் குளித்து,அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த மொத்த உலகமும்,என் உடலை தன் அமைதியால் எரித்துக் கொண்டிருந்தன.எங்கிருந்தோ திரண்டு வந்த மேக கூட்டமொன்று என் மேல் பொழிந்து என் வெப்பத்தை அணைத்து விட்டுப் போனது.இப்படியே ஒவ்வொரு இரவுகளும் அமைதியிலும்,வெப்பத்திலும்,தனிமையிலும் என்னை சிதைத்துக் கொண்டிருந்தன.சிதறி ஓடும் எண்ணங்களை,ஒழுங்குபடுத்தி தன் கைகளில் வழியே எழுத்துக்களால் பதிவு செய்வது ஒரு எழுத்தாளனுக்கு எவ்வித வலியைக் கொடுக்குமோ,அதனை ஒவ்வொரு வினாடியும் அனுபவித்துக் கொண்டிருந்தேன்.
அந்த நேரத்தில் தான் அவனைக் கண்டேன்.நடு நிசியில் பிச்சைக்காரனைப் போல் சுற்றி கொண்டிருக்கும் அவனை யாரென்று கேட்டேன்.ஈசன் என்று கூறினான்.நம்ப மறுத்த போது,தன் சடா முடியையும்,கழுத்தில் புரண்டு நெளிந்து கொண்டிருந்த பாம்பையும் எனக்கு காட்டினான்.மயானத்தில் தவம் செய்ய சென்று கொண்டிருந்த அவனுடன் நானும் சென்றேன்.இரவுகளில் மயானத்திற்கு செல்லும் ஆசை ஒன்று என் மனதுக்குள் சிறு வயது முதலே இருந்து கொண்டிருந்த ஒன்று.மோட்சத்தின் வழி எது என்று நான் கேட்ட போது,எரிந்து சாம்பலாகி அவன் உடல் மேல் உறையும் போது நான் மோட்சம் அடைவேன் என்றான்.எரியும் சடலத்தின் முன் நின்று அவன் ஆடிய ஆட்டத்தைக் கண்ட போது எனக்கு ஏற்பட்ட திக் பிரமையின் காரணமாக வார்த்தைகள் உறைந்து போய் விட்டன.உறைந்து விட்டிருந்த வார்த்தைகளை உருக்க முயற்சித்தபோது என்னை எட்டி உதைத்து கீழே என் நெஞ்சின் மேல் ஏறி நின்று பிரபஞ்ச தோற்றத்தின் ஆக்ரோஷமான நடனத்தை ஆடி முடிக்கிறான்.எலும்புகள் அனைத்தும் நொறுங்கி,உடல் அழிந்து,பாரம் இழந்து நீராக உருகிக் கிடந்த என்னை தன் கைகளால் அள்ளி திசைகளெங்கும் வீசி எறிகிறான்.காற்று என்னை தனக்குள் வாங்கிக் கொள்கிறது.உடலுக்குத்தான் எல்லைகள் உண்டு.உடலற்ற நிலையில் எல்லைகள் தாண்டி உணர்ந்தேன்.காற்று என்னைத் தங்கிச் சென்று என் நாச்தேன்கா விடம் சேர்த்தது.அவள் உடலுக்குள் நான் உறைந்து போனேன்.காற்றாக,நீராக,நெருப்பாக,உணர்வுகளாக,நினைவுகளாக அவள் உடலுக்குள் உறைந்து போனேன்.சிவன் அளிக்கும் மோட்சத்தை விட,இதுவே சிறந்த மோட்சம் என்று உணர்ந்து கொண்டேன்.....

Wednesday, December 15, 2010
மரணம்
எல்லையில்லாமல் விரிந்து செல்லும்
இருளின் கைகளுக்குள்
பிடிபடாமல்
மிதந்து கொண்டே இருக்கிறேன்
ஒளி ஒளியாய்
நட்சத்திரங்கள் சிதறிக் கிடக்கின்றன
கடற்கரை மணலில்
சிப்பியைத் தேடும்
சிறுவனைப் போல்
இருளின் எல்லா திசைகளிலும்
நட்சத்திரங்களைப் பொறுக்குகிறேன்
நட்சத்திரங்களை
என் கைகளில் மூடியவுடன்
ஒளியை இழந்து விடுகின்றன
மறுபடியும்
அவற்றை இருளில் வீசி எரிகிறேன்
நட்சத்திரங்கள் ஒளிர்கின்றன
இந்த
பிரபஞ்ச விளையாட்டில்
தொலைத்து விடுகிறேன்
என் அறிவை
இதை
விளையாடிக் கொண்டே இருக்கிறேன்
இருளில் நான் தொலையும் வரை
பிறகு புரிகிறது
நட்சத்திரங்கள் எனக்கு என்பதும்
இருளுக்கு நான் என்பதும்
இருளின் கைகளுக்குள்
பிடிபடாமல்
மிதந்து கொண்டே இருக்கிறேன்
ஒளி ஒளியாய்
நட்சத்திரங்கள் சிதறிக் கிடக்கின்றன
கடற்கரை மணலில்
சிப்பியைத் தேடும்
சிறுவனைப் போல்
இருளின் எல்லா திசைகளிலும்
நட்சத்திரங்களைப் பொறுக்குகிறேன்
நட்சத்திரங்களை
என் கைகளில் மூடியவுடன்
ஒளியை இழந்து விடுகின்றன
மறுபடியும்
அவற்றை இருளில் வீசி எரிகிறேன்
நட்சத்திரங்கள் ஒளிர்கின்றன
இந்த
பிரபஞ்ச விளையாட்டில்
தொலைத்து விடுகிறேன்
என் அறிவை
இதை
விளையாடிக் கொண்டே இருக்கிறேன்
இருளில் நான் தொலையும் வரை
பிறகு புரிகிறது
நட்சத்திரங்கள் எனக்கு என்பதும்
இருளுக்கு நான் என்பதும்
Saturday, December 11, 2010
அமைதியின் மொழிகள்
சென்னை நகரின் சாலைகளெங்கும் எப்போதுமே மக்கள் பயணித்துக் கொண்டே இருக்கிறார்கள்.இந்த உச்சி வெயில் பொழுதிலும் வாகனங்களும் மனிதர்களும் சப்தம் எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள்.இந்த திரளான மக்கள் பயணத்தில் வெயிலும் தன்னை இணைத்துக்கொண்டே இயங்குகிறது.வண்டியை என்னால் ஓட்ட முடியவில்லை.அக்குள்,பின் கழுத்து என உடம்பில் துணியால் மறைக்கப்பட்ட பாகங்கள் அனைத்தும் வியர்வை வடிந்து நாறுகிறது.AC போட்டுக் கொண்டு செல்லும் கார்களில் அமர்ந்திருக்கும் மனிதர்களைப் பார்க்கும் போது எரிச்சல் இன்னும் அதிகமாகிறது.ஆனாலும் நடந்து செல்லும் மனிதர்கள் என்னைப் பார்த்து எரிச்சல் அடைவார்கள் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது.மனித மனம் எப்போதுமே எல்லோர் மீதும் எரிச்சலையும் பொறாமையையும் கொண்டே இயங்குகிறது.அது தன்னளவில் நிறைவை அடைவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகவே கருத வேண்டியுள்ளது.சுயநலம பொதுநலம் என்பதற்கான விளக்கங்களும் கோட்பாடுகளும் எவராலுமே விவரிக்க முடியாது.
மேலும் இந்த மக்கள் பயணங்களின் ஒழுங்கின்மை வெயில் தாண்டிய எரிச்சலை வரவழைக்கிறது.சிக்னலில் நின்று கொண்டிருக்கிறேன்.இரு கால்களையும் இழந்த ஒருவன் தன் வாழ்க்கையின் அடிப்படை தேவைகளுக்காக யாசகம் கேட்டபடி கைகளை வைத்து புட்டங்களால் நடந்து வருகிறான்.இந்த தார் ரோட்டின் கொதிப்பு அவன் புட்டங்களை எரிக்கததை கண்டு வியந்து நிற்கிறேன்.ஆனால் என்னை சுற்றி நிற்கும் எவரும் அவனைப் பார்கவில்லை.அவர்களின் கண்கள் சிக்னலின் மீதும்,கைகள் வண்டியை முறுக்கிக் கொண்டும்,கால்கள் பூமியில் படாமலும் நிற்கிறார்கள்.சக மனிதனின் இருப்பின் வலியை சற்றும் நின்று கவனிக்காமல் இவ்வளவு அவசரமாக இவர்கள் எங்கு செல்கிறார்கள் என்று புரியவில்லை.அதுவும் ஒருவரை ஒருவர் முண்டி அடித்துக் கொண்டு,சிக்னல் விழுவதற்கு இன்னும் நேரம் இருந்தாலும் ஹாரனை அழுத்திக்கொண்டு ஒழுங்கின்மையோடு அவர்கள் செல்வது மிகப்பெரிய எரிச்சலை தருகிறது.
மிக சாதரணமாக என் கண்களைத் திருப்பி அந்த பிச்சைக்காரனைப் பார்க்கிறேன்.அவன் உடைகளைத் துவைத்தோ அவன் குளித்தோ வருடங்கள் ஆகியிருக்கும்.அவனைப் பார்க்கும்போது அவன் உண்டு உறங்கி கழிக்கும் இடம் எதுவாக இருக்கும் என தோன்றுகிறது.அவனுடைய வாழ்வின் அர்த்தம் என்னவாக இருக்கும் எனப் பிடிபட மறுக்கிறது.ஆனாலும் மனிதர்கள் வாழவே விரும்புகிறார்கள்.வாழ்க்கையைப் பற்றி புலம்பிக் கொண்டே வாழ விரும்புகிறார்கள்.மரணம் என்பது அச்சம் தருவதாகவே இருக்கிறது.தனக்கு அடுத்த வேளை உணவு கிடக்குமா என்பதில் கூட உறுதி இல்லாத இவனும் யாசகம் கேட்டு வாழ்கிறான்.உண்மையில் இங்கு எந்த மனிதனுக்கும் தன வாழ்வின் மேல்,இருப்பின் மேல் உறுதி இல்லையெனினும் வாழ்வில் எவ்வளவு வருத்தங்கள் இருப்பினும் அது துன்பத்தின் உச்சமாக இருப்பினும் மனிதன் வாழவே விரும்புகிறான்.என்னைப் போலவே.
எனது எண்ணங்களைத் துண்டித்த ஹாரன் சப்தங்கள் கேட்ட போது தான் சிக்னல் விழுந்து விட்டதை உணர்ந்து வண்டியை நகர்த்த முற்பட்டேன்.அந்த பிச்சைக்காரனும் வேகமாக நகர முற்பட்டான்.அந்த வினாடியில் அவன் கண்களைப் பார்த்தேன்.மனித மனம் கண்களில் தான் வெளிப்படுகிறது.உயிரையும் பசியையும் கண்களில் பிடித்து வைத்திருந்த அவன் கண்கள் என் ஆன்மாவை அடித்து காயமாக்கியது. இந்த ஆன்மாவைக் காயப்படுத்தும் கண்களைக் கொண்டவள் என் காதலி மட்டுமே என இதுவரை எண்ணியிருந்தேன். நான் தன்னிச்சையாக நகர முற்பட்டபோது ஹாரன் அலறலும் அதனைத் தொடர்ந்து ஒரு மாநகரப் பேருந்தின் வேகமான இடியையும் தாங்கிக் கொண்டு கொதிக்கும் தார் ரோட்டில் விழுந்தேன்.வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் அவ்வண்டியின் சக்கரம் என் தலை மேல் ஏறியது.
எந்த வலியையும் நான் உணரவில்லை.தார் ரோடின் கொதிப்பும்,வெயிலின் சூடும் எரிச்சலின் உச்சக்கட்ட குரூரத்தை உணர்த்தின.காட்சிகளின் மயக்கமும் சப்தங்களின் மயக்கமும் வெளியங்கும் நிறைந்தன. ஒளியில் மூழ்கிக் கொண்டிருந்தேன்.உடலில் காற்று வேக வேகமாக வெளியில் சென்று கொண்டிருந்தது.ஆனால் உடலில் எங்கும் வலி இல்லை.நினைவுகள் சுழன்று சுழன்று என்னை தனக்குள் இழுத்துக் கொண்டிருந்தன.அம்மா,அப்பா,நண்பர்கள்,பள்ளி,கல்லூரி என எண்ணங்கள் திசை மாறி,காட்சிகள் எவ்வித ஒழுங்கும் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தன.உலகம் எவ்வளவு இனிமையாக இருக்கிறது.காற்று,தண்ணீர்,பறவைகள்,பூக்கள்,மழை,வயல் வெளிகள்,மலைகள்,நெருப்பு,அதிகாலை,புளி சாதம்,மார்கழி குளிரும் பஜனையும்,கால்கள் நனைக்கும் தண்ணீர் ...இப்படி ஓடி கொண்டிருந்த நினைவுகள் ஒரு புள்ளியில் நின்ற போது அங்கு வெறுமையும்,பின்பு அந்த வெறுமையை அவளுடைய முகமும் nirappiyadhu.
அவள்....அவளுக்கு கடிதம் ஒன்றை எழுதி விட நினைக்கிறேன்.எழுத்துக்களால் எதுவும் இப்போது என்னால் எழுத முடியாது.என் கைகள் என்னிடம் இருக்கிறது என்று எனக்குத் தோன்றவில்லை.எண்ணங்களால் எழுதும் எழுத்துக்களுக்கு வடிவம் இல்லை..இந்த கடிதத்திற்கு மொழி கிடையாது.வடிவம் கிடையாது.இவை என்னுடைய நினைவுகள்.காற்றின் பரந்த வெளியில் என்னோடு கரைந்து கலந்து விடும் நினைவுகள்.இதனைப் படிப்பவர்கள் எந்த மொழியில் வேண்டுமானாலும் இதனைப் புரிந்து கொள்ளட்டும்.
அன்புள்ள காதலிக்கு,
தனிமையின் இருளிலும் அதன் அமைதியிலும் ஆனந்தத்தை அனுபவித்துக் கொண்டிருந்த பொழுதுகளில்,இரைச்சலாக வந்து சேர்ந்தாய்.அமைதியில் ஆனந்தமும் இரைச்சலில் பேரானந்தமும் இருக்கும் அதிசயத்தை எனக்கு உணர்த்தினாய்.என்னுள் எப்படி இவ்வளவு நீ நுழைந்தாய் என்பதற்கு நிறைய கணங்கள் சாட்சிகளாக கிடக்கின்றன.ராமனைப் போல் கண்டதும் காதல் கொண்டவனல்ல நான்.அது உருவத்தின் மீது ஏற்படும் மோகம்.நான் உன்னிடம் ஈர்க்கப்பட்டது என் ஆன்மாவின் மையப்புள்ளியிலிருந்து.என் தோளில் நீ சாய்ந்த வினாடிகள்,என் கன்னத்தில் நீ பதித்த முத்தங்கள்,என் கண்களின் வழியே என் உயிரை உருக்கிய பொழுதுகள்,நீ கண்ணீர் உகுத்து ஈரமாக்கிய உடைகள் என என்னுடைய நினைவுகள் மூலம் என் வாழ்வின் தருணங்களை மகிழ்ச்சியாக்கியவள் நீ.உன்னுடன் இருந்த நிமிடங்களில் எல்லாம் வாழ்வின் முழு சுவையையும் காட்சிகளின் மகோன்னதமான புனிதத்தையும் அள்ளி அள்ளிப் பருகிக் கிடந்தேன். என்னை இருளில் இருந்து கைப் பிடித்து வாழ்வின் மையத்திற்கு அழைத்து வந்தாய்.அந்த நிமிடங்களை எல்லாம் உன்னுடைய இருப்பால் நிரப்பி என்னுடைய வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தாய்.நீ இல்லாத நிமிடங்களில் எல்லாம் இயற்கை என்னை வருத்தியது.வானம் என் மேல் விழுந்து அழுத்தியது.உனக்காக ஒவ்வொரு வினாடியும் ஏங்கித் தவித்தேன்.என்னுடைய இருப்பை உன் வழியே பார்த்தேன்.என் தேவதையே...உன் கண்களைப் போல் இவ்வுலகின் உண்மைப் பேசும் ஆன்மாவை நான் பார்த்ததில்லை.அதனை பார்த்துக் கொண்டே என் ஆயுள் முழுதும் கழித்து விட்டு உன் கைகளைப் பிடித்தபடியே மரணமடைய நினைத்தேன்.உன் கண்களில் நான் என் உயிரின் வடிவத்தைப் பார்த்தேன்.என் ஆன்மாவின் புனிதத்தைப் பார்த்தேன்.இயற்கையின் பேராட்சியைப் பார்த்தேன்.என்னை கலங்கச் செய்யும் அந்த கண்களைத் தவிர உலகின் மதிப்பற்ற பொருள் ஏதும் இருந்ததாக உணரவில்லை.என் உயிரை உருக்கி உன் உயிரோடு கலந்து கிடந்தேன்.
ஒரு சுகமான உறக்கத்தின் ஆழமான கனவுகளின் போது திடீரென்று ஏற்படும் விழிப்பின் காரணமாக விளையும் ஒரு நெஞ்சு வலியைப் போல் இந்த சுகமான நினைவுகளை மட்டும் எனக்கு அளித்து விட்டு,வாழ்வின் யதார்த்தமான தருணங்களை அழித்து காயமாக்கி நீ சென்ற அந்த நாளிலும் உன் கண்களைப் பார்த்தபடியே மயங்கிக் கிடந்தேன்.இப்போது உடலில் வலியை உணர்கிறேன்.ஒரு கொடுமையான வெயில் பொழுதில் ஒரு நாயின் வாயில் இருந்து வறண்ட நீர் சொட்டிக் கொண்டிருந்தபோது நீ வந்தாய்.நீ பிரிந்து செல்வதை சொல்வதற்காக.என் ஆன்மாவின் அனைத்து பரிமாணங்களும் காயப்பட்டு வேதனையின் உச்சத்தில் வெயில் என்னை எரிக்க மொழிகள் அற்று நின்ற அந்த பொழுதை விட இப்போது என் பார்வை இழந்து,பேச்சை இழந்து,பூமியின் மடியில்,வெயில் எரிக்க,நீர் வற்றிக் கிடக்கும் நிலையில் நான் சற்றே அமைதியை உணர்கிறேன்.நான் மரணித்துக் கொண்டிருக்கிறேன்.மரணம் இவ்வளவு குரூரமாய் எனக்கு அமைந்து விட்டது என் வாழ்வின் சாபமாக இருப்பினும் உன்னை பிரிந்த விநாடிகளை விட இது அமைதியாகவே இருக்கிறது.ஆனாலும் என் தேவதையே...இப்பொழுதும் ஒரு பரி பூரண வாழ்வை வாழ்ந்து விட்ட திருப்தியிலேயே இறக்கிறேன்.இந்த முப்பது வயதிலும் ஒரு ௧௦௦ வயது வாழ்ந்து விட்ட மகிழ்ச்சி உன்னாலே,உன் கண்களாலே தான் எனக்கு கிடைத்திருக்கிறது.நான் இப்பொழுதும் மரணத்தின் வாயிலிலும் நின்று உன் கண்களை மட்டுமே காண்கிறேன்.என் உயிரின் வாசல் அது.உன் கண்களின் வழியே என் உயிரை விடுவித்து விடு.மகிழ்ச்சியோடு மரணம் கொள்கிறேன்.
நான் செல்கிறேன் என் அன்பு தேவதையே.....
என் உடலை நிர்வாணப்படுத்தி குளிக்க வைக்கும் போது என் அம்மா அதனை செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.அம்மா..நீ என்னை சிறு வயதில் குளிக்க வைத்த போது காட்டிய எதிர்ப்பை இப்போது காட்ட மாட்டேன்.சலனமில்லாமல் அமைதியாக இருப்பேன்.என்னை நிர்வாணமாய் பார்த்த ஒரே உயிர் இந்த உலகில் நீயாகவே இருந்து விட்டு போ.உன் முலைக் காம்பின் வாசமும்,உன் உயிர் பாலின் சுவையும் எனக்கு இதுவரை தெரிந்ததில்லை.இப்போது நாவில் அது தெரிகிறது.அம்மா....நா வறண்டு விட்டது.சிறிது தண்ணீர் ஊற்றுவாயா?
உலகம் இனியது..வாழ்க்கை இனியது..என் அம்மா இனியவள்..அப்பா இனியவர்..காதலி மிக இனியவள்..சகோதரி,நண்பர்கள்,என்னோடு இருந்த சக மனிதர்கள்...இனிது இனிது அனைத்தும் இனிது.இதை இறந்த யாரேனும் வாழ்பவர்களுக்கு சொல்லி விட்டு மறைந்து விடுங்கள்.வாழ்பவர்கள் ஓட மாட்டார்கள்.சக மனிதனை நேசிப்பார்கள்.பணத்தை விட பெரிய ஒன்று எல்லோருக்கும் கிடைக்கும்.
நான் மரணிக்கிறேன்...
அங்கு வந்த ஆம்புலன்சில் இருந்து இறங்கியவார்கள் அவனை தூக்கிப் போட்டுக் கொண்டு சென்றார்கள்.சிதறிக் கிடந்த அவன் மூளையையும் அவனுடைய நினைவுகளையும்.வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த மனிதர்கள் பயணிக்க ஆரம்பித்தார்கள்.அவனுடைய நினைவுகளை அவன் காதலி கடைசி வரை அறியவில்லை.அவனுடைய தாகத்தை அவனுடைய அம்மா கடைசி வரை அறியவில்லை...

Sunday, November 28, 2010
நிழல்களில் கரைந்து போகட்டும் உடல்கள்
நிழல்களில்
கரைந்து போகட்டும் உடல்கள்
நிழல்களுக்கு....
சாதிகள் இல்லை
மதங்கள் இல்லை
வண்ணங்கள் இல்லை
அழகு இல்லை
அதனால் அகோரமும் இல்லை
நிழல்கள்
தினமும் புதிதாய் பிறக்கின்றன
தினமும் புதிதாய் இறக்கின்றன
நினைவுகள் அற்றதாய் இருக்கின்றன
நேற்றைய தினம்
தனக்கு துரோஹம் செய்த
மற்றொரு நிழல்
அதன் நினைவுகளில் இருப்பதில்லை
இன்றைய தினம்
தனக்கு மகிழ்ச்சி செய்த
இன்னொரு நிழல்
அதன் நினைவுகளில் இருப்பதில்லை
நிழல்களின் உலகத்தில்
எப்போதும் சூரியன் இருக்கிறது
ஆனாலும்
எப்போதும் இருள் இருக்கிறது
நிழல்களில்
ஊனம் \இல்லை
தீண்டாமை இல்லை
இருப்பின் அவஸ்தைகள் இல்லை
பணம் இல்லை
பசி இல்லை
முதிர் கண்ணிகள் இல்லை
அழகிகள் இல்லை
புணர்வுகள் இல்லை
பிச்சைகாரர்கள் இல்லை
நிழல்கள்
உடைகள் அணிவதில்லை
நகைகளும் அணிவதில்லை
என் உடலும்
நிழலில் கரைந்து போகட்டும்
எல்லா மனிதர்களின் உடல்களும்
நிழல்களில் கரைந்து போகட்டும்
எப்போதும்
இருள் சேர்ந்த அமைதியில்
கரைந்தபடியே
இருந்து விடுவோம்
கரைந்து போகட்டும் உடல்கள்
நிழல்களுக்கு....
சாதிகள் இல்லை
மதங்கள் இல்லை
வண்ணங்கள் இல்லை
அழகு இல்லை
அதனால் அகோரமும் இல்லை
நிழல்கள்
தினமும் புதிதாய் பிறக்கின்றன
தினமும் புதிதாய் இறக்கின்றன
நினைவுகள் அற்றதாய் இருக்கின்றன
நேற்றைய தினம்
தனக்கு துரோஹம் செய்த
மற்றொரு நிழல்
அதன் நினைவுகளில் இருப்பதில்லை
இன்றைய தினம்
தனக்கு மகிழ்ச்சி செய்த
இன்னொரு நிழல்
அதன் நினைவுகளில் இருப்பதில்லை
நிழல்களின் உலகத்தில்
எப்போதும் சூரியன் இருக்கிறது
ஆனாலும்
எப்போதும் இருள் இருக்கிறது
நிழல்களில்
ஊனம் \இல்லை
தீண்டாமை இல்லை
இருப்பின் அவஸ்தைகள் இல்லை
பணம் இல்லை
பசி இல்லை
முதிர் கண்ணிகள் இல்லை
அழகிகள் இல்லை
புணர்வுகள் இல்லை
பிச்சைகாரர்கள் இல்லை
நிழல்கள்
உடைகள் அணிவதில்லை
நகைகளும் அணிவதில்லை
என் உடலும்
நிழலில் கரைந்து போகட்டும்
எல்லா மனிதர்களின் உடல்களும்
நிழல்களில் கரைந்து போகட்டும்
எப்போதும்
இருள் சேர்ந்த அமைதியில்
கரைந்தபடியே
இருந்து விடுவோம்
Wednesday, May 12, 2010
You see...Once in a while my life become so miserable that I just can't bear to go on living.It's as if Im the only creature in the whole wide world,it's as if there are no other living creatures except me anywhere in this world.At such times I hate everything.I hate every being including myself.I wouldnt give a damn if everybody died.It must be some sickness in my heart.That is what get started me drinking
Subscribe to:
Posts (Atom)