Wednesday, March 18, 2009

ஓம் சிவோஹம் - நான் கடவுள் பாடல் தமிழாக்கம்

இந்த பாடல் வெளியிடப்பட்ட நாள் முதலே இதனை தமிழாக்கம் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் எனக்குள்ளே தோன்றிய போதும்,சமஸ்கிருதம் முறையாக பயிலாத காரணத்தாலும்,என்னுடைய சோம்பல் மிகுதியாலும்,இந்த வேலையை முடிக்காமாலே கழித்து கடத்தி விட்டேன்.ஆனால் இப்போது அதன் முக்கியத்தன்மையை உணர்ந்து இந்த மொழியாக்கத்தைப் பதிவு செய்கிறேன்.
மொழியாக்கம் செய்யப்படும் எந்த பாடலும்,கட்டுரையும் முறையாக அந்த மொழியைப் பயிலாதவர்கள் செய்யும் போது,அந்த மொழியாக்கத்தை உண்மையான படைப்பின் அர்த்தமாகவோ,பிரதியாகவோ எடுத்துக் கொள்ள கூடாது.இந்த மொழியாக்கமும் அவ்வகையே.நேரடியான அர்த்தமாக கொள்லாமல்,ஒரு புரிதலாக கொள்ள வேண்டுகிறேன்.
நன்றி - கிரிராஜன்(இம்மொழியாக்கதிற்கு உதவியவர்)
பாடல்
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
ஓம்
பைரவ ருத்ராய மஹா ருத்ராய கால ருத்ராய கல்பாந்த ருத்ராய வீர ருத்ராய ருத்ர ருத்ராய கோர ருத்ராய அகோர ருத்ராய மார்த்தாண்ட ருத்ராய அண்ட ருத்ராய ப்ரஹ்மாண்ட ருத்ராய சண்ட ருத்ராய ப்ரசண்ட ருத்ராய தண்ட ருத்ராய சூர ருத்ராய வீர ருத்ராய பவ ருத்ராய பீம ருத்ராய அதல ருத்ராய விதல ருத்ராய சுதல ருத்ராய மஹாதல ருத்ராய ரஸாதல ருத்ராய தலாதல ருத்ராய பாதல ருத்ராய நமோ நமஹ
ஓம் சிவோஹாம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்
ஓம்-அஹம்(நான்)சிவன்,ஓம்-அஹம்(நான்) சிவன்;ருத்ர நாமத்தை ஜபிக்கிறேன்

வீர பத்ராய அக்னி நேத்ராய கோர சம்ஹாரகா
வீர பத்ரனே;அக்னி நேத்ரனே(கண்களில் நெருப்பைத் தெரிப்பவனே);கோர சம்ஹாரனே(கோரமாக அழிப்பவனே)

சகல லோகாய சர்வ பூதாய சத்ய சாக்ஷாத்கரா
சகல லோகாமானவனே;சர்வ பூதங்களானவனே;சத்தியத்தின் உருவமே

சம்போ சம்போ சங்கரா
சாம்பு - சிவனின் ஒரு பெயர்;சங்கரா-சம்+கரா(சம்-நன்மை;கரா-செய்பவன்)
சிவனே சிவனே நன்மை செய்பவன் என்று பொருள் கொள்க

ஓம் சிவோஹாம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்

ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ

ருத்ர மந்திரங்கள்

அண்ட ப்ரமாண்ட கோடி அகில பரிபாலனா
ப்ரமாண்டமான கோடி அண்டங்களையும் அகிலம் அனைத்தையும் ஆள்பவனே

பூரணா ஜகத் காரணா சத்ய தேவ தேவப் ப்ரியா
முழுமையானவனே;இந்த ஜகத்தை தோற்றுவித்தவனே;சத்திய தேவர்களின் ப்ரியமானவனே

வேத வேதார்த்த சாரா யஞ்ன யஞ்னோமயா
வேதங்களின் சாரமே;அடைக்கலத்திற்கு இருப்பிடமே

நிஷ்சலா துஷ்ட நிக்ரஹா சப்த லோக சம்ரக்ஷனா
அசைக்க முடியாதவனே;துஷ்டர்களை அழிப்பவனே;அனைத்து உலகங்களையும் காப்பவனே

சோம சூர்ய அக்னி லோச்சனா ஸ்வேத ரிஷப வாகனா
சூரியன்,நிலா,அக்னி என முக்கண்களை உடையவனே;ரிஷப வாகனனே

சூல பானி புஜங்க பூஷனா திரிபுர நாஷ நர்த்தனா
சூலமும் நாகமும் கொண்டவனே;மூன்று கோட்டைகளைக் கொண்ட அரக்கர்களை அழித்து நடணம் புரிந்தவனே

யோமகேச மஹாசேன ஜனகா பஞ்ச வக்ர பரசு ஹஸ்த நமஹா
வானத்தை(நாம் கண்களால் காணும் வானம் அல்ல.Space) கேசமாக,மஹா சேனையின்,புலன்களின் தலைவனாக விளங்குபவனே.ஐந்து முகங்களும்,பரசு ஆயுதத்தையும் கொண்டவனே....வணங்குகிறேன்

ஓம் சிவோஹாம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்

காலத் த்ரிகால நேத்ர த்ரிநேத்ர சூல த்ரிசூல தாத்ரம்
முககாலத்தையும் அறிந்தவனே;மூன்று கண்கள் கொண்டவனே;மூன்று முனைகள் உடைய சூலத்தை கொண்டவனே

சத்ய ப்ரபாவ திவ்யப் பிரகாச மந்த்ர ஸ்வரூப மாத்ரம்
உண்மையின் வடிவமே;மாசற்ற ஒளியானவனே;மந்திரங்களின் ஸ்வரூபமே

நிஷ்ப்ர பஞ்சாதி நிஷ்க லங்கோஹம் நிஜ பூர்ண போத ஹம் ஹம்
கூட்டல்,கழித்தல் என குறைவுக்கும்,மாற்றத்திற்கும் அப்பாற்பட்டவனே;அசுத்ததிற்கு அப்பாற்பட்டவனே;பூரணமாய் நிறைந்திருப்பவனே

கத்ய காத்மாகம் நித்ய ப்ரம்ஹோகம் ஸ்வப்ன காசோகம் ஹம் ஹம்
சரண் அடைய வேண்டிய கடவுளே;நித்தியமான ப்ரம்ஹனே;கனவுகளில் நிறைந்திருப்பவனே

சச்சித் ப்ரமானம் ஓம் ஓம் மூல ப்ரமேக்யம் ஓம் ஓம்
உடலின் உண்மையே;அறிவின் பொருளே

அயம் ப்ரமாஸ்மி ஓம் ஓம் அஹம் ப்ரமாஸ்மி ஓம் ஓம்
ஆன்மா ப்ரம்ஹன்;நான் ப்ரம்ஹன்

கண கண கண கண கண கண கண கண சஹஸ்ர கந்த சப்த விஹரதி
ஆயிரம் மணிகளின் ஒலியில் இருப்பவனே

டம டம டம டம டம டம டம டம சிவ தமருக நாத விஹரதி
உடுக்கைகளின் நாத ஒலியில் விளங்குபவனே

ஓம் சிவோஹாம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்

1 comment:

sruthi said...

good job....