விற்பவள்
நேற்றுப் பெருமழை பெய்தது
அமைதியான இருள் வெளியில்
காற்றைக் கிழித்து கத்தும் நாய்கள்
என் மரணத்தின் வருகையை மொழிகின்றன
இருள் தின்ற வெளிச்சத்தில்
நிதானமற்று ஓடுகின்ற
கரப்பான் பூச்சி போல
என் மனம் பதறி ஓடுகிறது
மரணத்தை நோக்கி
நனைந்து நிற்கும் மரமும்
அழுகிறது எனக்காக
இலையின் வழியில் நீர் சொட்டி
என்னோடு பிறந்தது
என்னோடு வளர்ந்தது
என்னோடு வாழ்ந்தது
என்னோடு தேய்ந்தது
இந்த மரம்
யாரும் வரவில்லை
என்னிடமும் மரததிடமும்
பூக்கள் பூக்கும் வரை
பிறகு வந்தன
சில மனிதர்களும்
பல விலங்குகளும்
தேடுதல் முடித்து தொலைந்தன
தேடியவர்களின்
அடையாளங்களை சுமக்கிறோம்
பெயர்களை மரமும்
பல் நக கீறல்களை நானும்
நாளடைவில் நாற்றமடிதோம்
மூத்திர நாற்றம் மரத்துக்கு
எச்சில் நாற்றம் எனக்கு
மௌன மொழியில் கலந்தோம்
நானும் மரமும்
நான் புணர்ந்தேன் மரத்தை
மரம் புணர்ந்தது என்னை
புணர்வின் சுக வழியை
மரத்திடம் மட்டும் உணர்ந்தேன்
போகிறேன் தோழனே
உயிரற்று இறக்கிறேன்
வாங்குபவன்
நேற்றும் பெருமழை பெய்தது
விலைமகள் இறந்தால்
அவள் வீட்டு மரமும்
பெருங்காற்றில் வீழ்ந்து போனது
அதைக் கொண்டு எரித்தனர்
அவள் பிணத்தை
3 comments:
Good One
Post a Comment