பெருமழையின் ஒரு துளி,கடலில் அமைதியாக கலந்து விடுவது போல எனது வாழ்கையும் மரணத்தில் கலந்து விடுகிறது.ஒவ்வொரு தனி மனித வாழ்வும் ஒவ்வொரு மழையின் துளியைப் போலத்தான்.ஆரவாரமாக தொடங்கும் மழைத் துளி கடலில் கலந்து அமைதியாக காணாமல் போய் விடுகிறது.அத்தனை ஆரவாரத்தையும் தன்னோடு வாங்கிக் கொண்டு அமைதியாக கடல் விளங்குகிறது.மரணமும் அதை போலதான்.எண்ணற்ற உணர்வுகளின் குவியலாய் விளங்கும் ஆர்ப்பாட்டமான மனித வாழ்க்கையை தன்னுள்ளே அமைதியாய் அடக்கிக் கொள்கிறது.
கடலில் கலந்து காணாமல் போய் விடுவதால் மழையின் துளி இல்லாமல் போய் விடுவதில்லை.அது தன்னளவில் இருந்து மறைகிறது.அதனைப் போலவே மனித இருப்பும் மரணத்தால் அழிக்கப்படும் போதிலும் தன்னிறைவைத் தேடி இயங்குகிறது.ஆனாலும் மரணத்திற்கு முன்னாலும் தன்னுடைய இருப்பை தன்னளவில் நிறைவமைத்துக் கொண்ட ஆன்மாக்களின் எண்ணிக்கை யோசிக்க வைக்கிறது....
No comments:
Post a Comment